"தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும்?" - முதலமைச்சர் எடப்பாடி விளக்கம்

Asianet News Tamil  
Published : Jun 13, 2017, 02:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
"தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும்?" - முதலமைச்சர் எடப்பாடி விளக்கம்

சுருக்கம்

edappadi says that where will be aiims to be placed

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு ஐந்து இடங்களை பரிந்துரை செய்துள்ளது  என்றும் மருத்துவமனை எங்கு அமைப்பது என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத்திட்டத்தின் கீழ்  குழந்தைகளுக்கு காக்ளியர் செவிதிறன் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  லக்ஷிதா, அன்பு ஆகிய குழந்தைகளுக்கு  காக்ளியர் செவித்திறன் கருவியை வழங்கினார். இந்நிகழ்வில் சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் மற்றம் பலர் கலந்துக்கொண்டனர்.

இதுவரை தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டுத் திட்டத்தின் மூலம் 2500 குழந்தைகளுக்கு மேல் காக்ளியர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும் இத்திட்டதின் மூலமாக 2856 குழந்தைகளுக்கு சுமார் 220 கோடியே 60 லட்சம்  ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக  சுகாதரத்துறை அநிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,   இதுவரை 16,500 பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்து உள்ளனர் என்றார்.

 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு ஐந்து இடங்களை பரிந்துரை செய்துள்ளது என்றும். மருத்துவமனை எங்கு அமைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!