ஒரு ஃபுளோவில் வந்திருச்சி … மன்னிச்சுங்கங்க ! ப.சிதம்பரத்திடம் வருத்தம் தெரிவித்த எடப்பாடி !!

By Selvanayagam PFirst Published Aug 14, 2019, 10:04 PM IST
Highlights

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தவறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதையடுத்து, நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்கு அணையைத் திறந்து வைத்தார். அப்போது, காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பம் ,  ‘தமிழகத்தைப் பிரித்தால் கூட அதனை அதிமுக தலை வணங்கி ஏற்கும் என்று பேசியிருந்ததை செய்தியாளர்கள் சுட்டிக் காட்டினர்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர்  ”ப.சிதம்பரம் எத்தனை ஆண்டுக் காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன் பூமிக்குத்தான் பாரம். அவருடைய பேச்சைப் பொருட்படுத்த வேண்டியதில்லை பட்டெ சொல்லிவிட்டார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டணம் தெரிவிக்கப்பட்டது. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஒரு முதலமைச்சர் பேச்சும் பேச்சா இது ? 

ஆசியாவிலேயே சிறந்த நிதியமைச்சர் என்று பட்டம் பெற்றவரைப் பற்றி ஓரு முதலமைச்சர்  இப்படி சொல்லலாமா? இதுதான் அரசியல் நாகரீகமா? அவர் சாமி கும்பிடுபவர் என்று நன்றாக எனக்குத் தெரியும். சாமி கும்பிடும்போது அவருக்கு மனசாட்சி உறுத்தும் என கடுமையாக தெரிவித்திருந்தார்.

முதலில் இதை சாதாரணமாக நினைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் தான் அதன் தீவிரத்தை உணர்ந்தார். அவரது ஆதரவாளர்களும், அவரிடம் என்னன்னே இப்படி பொசுக்குன்னு சொல்லிப்புட்டீங்க…  ஒருத்தரை பூமிக்கு பாரமா இருக்கார்னு சொன்னா, அவர் இருக்கவே வேணாம்னுதானே அர்த்தம் என கூறியிருக்கின்றனர்.

இதையடுத்து தனது நண்பர் மூலம் ப.சிதம்பரத்தை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சிதம்பரமே போனை எடுத்ததுப் பேசியிருக்கிறார். ‘சார்... சிஎம்தான் பேசச் சொன்னாரு. உங்களப் பத்தி பேசினதுக்காக ரொம்ப வருத்தப்பட்டாரு. உங்ககிட்ட சாரி கேக்கறதுக்காக சிஎம் பேசணும்னு விரும்புறாரு. 

நீங்க சொன்னீங்கன்னா உங்க லைன்ல வந்து பேசுறேன்னு சொன்னாரு’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ப. சிதம்பரம், ‘இல்லைங்க. அதை நான் எதுவும் பெரிசா எடுத்துக்கலை. அவர் என்கிட்ட பேச வேண்டிய அவசியமும் இல்ல’ என்று மென்மையாக மறுத்துவிட்டார். இந்தத் தகவலும் முதல்வருக்கு சொல்லப்பட அவர் மேலும் வருத்தப்பட்டிருக்கிறார்.

எது எப்படியோ முதலமைச்சர் ஒர பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இன் என்ன நடக்குமோ ?

click me!