அடுத்தடுத்து வரும் நெருக்கடிகள்... திருப்பதி ஏழுமலையானிடம் குடும்பத்தோடு தஞ்சமடைந்த எடப்பாடி!!!

 
Published : May 09, 2017, 10:34 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
அடுத்தடுத்து வரும் நெருக்கடிகள்... திருப்பதி ஏழுமலையானிடம் குடும்பத்தோடு தஞ்சமடைந்த எடப்பாடி!!!

சுருக்கம்

edappadi palaniswamy in tirupati

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை தனது குடும்பத்தினருடன்  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் நடந்த சில அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மாலை 4 மணி அளவில் கார் மூலம் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு புறப்பட்டார்.

சென்னையிலிருந்து குடும்பத்துடன்  சென்ற அவர்  திருப்பதி ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கினார்.தேவஸ்தான அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பளித்தனர். 



இதைனையடுத்து,  இதையடுத்து இன்று அதிகாலை நடைபெற்ற அஷ்ட தள பாத பத்ம ஆராதனை சிறப்பு சேவைக்கு சென்ற அவர் தனது குடும்பத்தாருடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஆலய அர்ச்சகர்கள் வேத ஆசிர்வாதம் செய்தனர். 

அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சின்கல் மற்றும் அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கிக் கௌரவித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலயத்தின் எதிரிலுள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்து வேண்டுதல் செலுத்தியபின் ஆஞ்சநேயரை வழிபட்டார்.

அமைச்சர்கள் மீது வழக்கு, விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை, கொடநாடு கொலை  என அடுத்தடுத்து நெருக்கடியில் சிக்கித்தவித்து கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  இந்த நெருக்கடியை சமாளிக்கவே திருப்பதி ஏழுமலையானிடம் குடும்பத்தோடு சென்று வழிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!
‘டோ ஷூட் நடத்தும் முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம்…’ எம்.ஜி.ஆர் சமாதியில் இபிஎஸ் சபதம்