எல்லாப் பக்கமும் நெருக்கடி !! சசிகலாவிடம் சரண்டர் ஆக தூதுவிட்ட இபிஎஸ் !!

By Selvanayagam PFirst Published Sep 18, 2018, 7:55 PM IST
Highlights

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, குட்கா வழக்கு, உள்ளாட்சித்துறை ஊழல். நெடுஞ்சாலைத்துறை ஊழல் என பல வழக்குகளில் சிக்கித் தவிக்கும் ஆளும் அதிமுகவை மத்திய அரசு தொடர்ந்து மிரட்டி வருவதால் பேசாமல் சசிகலாவிடமே சரண்டர் ஆகிவிடலாம் என முடிவு செய்த எடப்பாடி பழனிசாமி, தனது மனைவி மூலம், இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியாவிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவும் தமிழக அரசும் முற்றிலும் பாஜகவின் கட்டுப்பாட்டில் போய்விட்டதாக பரவலாக பேசப்படுகிறது. பாஜக சொன்னதை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு அதிமுக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்குவரத் துடிக்கிறது. அதனால் பாஜக செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் அங்குள்ள லோக்கல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

பீகாரில் நிதீஸ்குமாருடன் கூட்டணி நேற்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவுக்கு திமுக கூட்டணி கதவை அடைத்துவிட்டதால்,எப்படியாவது அதிமுகவின் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது.

அதற்காக அதிமுக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துவதாகவும் அதிமுகவினரே குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புகொண்ட சிலர், நீங்கள் எல்லாம் ரஜினிகாந்த்தை தலைவராக ஏற்றுக் கொண்டால் உங்கள் ஆட்சிக்கு எந்தப் பிரச்சனையும் வராது என பாஜக டெல்லி தலைமை விரும்புவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால அதிர்ந்து போக எடப்பாடி சக அமைச்சர்களுடன் இது குறித்து விவாதித்துள்ளார்.

அப்போது பேசிய அமைச்சர்கள், சசிகலா மீது என்னதான் நமக்கு பிரச்சனை இருந்தாலும், அவர் இங்கு இருதிருந்தால் பாஜக இப்படி நம்மை மிரட்டுமா ?  என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே மனநிலைக்கு எடப்பாடி பழனிசாமியும்  தற்போது வந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி மத்திய அரசுக்கு பயந்து நடந்து கொண்டே இருந்தால், இருக்கும் தொண்டர்களும் தினகரன் பக்கமே போய் விடுவார்கள் என்றும், அதற்கு பேசாமல் சசிகலாவின் தலைமையையே ஏற்கலாம் எனவும் அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து எடப்பாடியின் மனைவி ராதா,  இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியாவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இந்த தகவல் பெங்கஞளுரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் சொல்லப்பட்டபோது, 18 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவரட்டும் அதன் பிறகு யோசிக்கலாம் என அவர் சொல்லியனுப்பி இருக்கிறார்.

ஆக நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க என்ன வழி என்பதே தற்போது ஆட்சியில் உள்ளவர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது.

click me!