எடப்பாடியின் கஜ கஜா... ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிக்கும் டிடிவி!

By vinoth kumarFirst Published Nov 21, 2018, 3:33 PM IST
Highlights

கனமழை பெய்வதால், திருவாரூர், நாகையில் இறங்கமுடியாமல் திருச்சி வந்துவிட்டேன். மீண்டும் மற்றொரு நாளில் திருவாரூர், நாகை வருவேன்! என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

* கனமழை பெய்வதால், திருவாரூர், நாகையில் இறங்கமுடியாமல் திருச்சி வந்துவிட்டேன். மீண்டும் மற்றொரு நாளில் திருவாரூர், நாகை வருவேன்! என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். (கஜா பிய்ச்சுப்போட்ட மக்களின் வாழ்க்கையை ஹெலிகாப்டர்ல சுற்றிப் பார்த்து முடிச்சுட்டு, ஃப்ளைட் ஏறப்போற நிலையில, கண்ணீர் வடிய நீங்க சொல்றதை கேக்குறப்ப எங்களால முடியல சி.எம். முடியல!)

* பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரும் அமைச்சர்களை மக்கள் உள்ளே வரவிடாமல் போராடுகின்றனர். நிவாரணம் கிடைக்காததால் நியாயம் கேட்டு கொதிக்கின்றனர். எனவே அதிகாரிகளாவது அந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டும்! என்று தினகரன் கோரியுள்ளார். 
(அதெப்டிண்ணே இவ்வளவு பஞ்சாயத்துக்கு நடுவுலேயும் அமைச்சர்களையும் அடிச்சாமாதிரி ஆச்சு, மக்கள்ட்டேயும் நல்ல பேர் வாங்குனா மாதிரி ஆச்சுன்னு பேட்டி கொடுக்குறீங்க?)

* முதல்வர் வர்றார்ன்னு எங்களை ஏன் அழைச்சுட்டு வந்தீங்க? ஆறு மணி நேரம் காக்க வெச்சுட்டு இப்போ நிவாரண பொருள் அப்புறமா கிடைக்குமுன்னு சொல்றீங்க? கூட்டம் காட்ட நாங்களென்ன பொம்மைகளா? என்று நாகையில் மக்கள் சீறினர். (ப்பார்றா இப்போதான் உங்களுக்கு புரிஞ்சுதா நாமெல்லாம் பொம்மைன்னு! இந்த பொம்மலாட்டம் தான் கட்சி வித்தியாசமில்லாம பல காலமா நடந்துட்டு இருக்குதே அப்ரசண்டிகளா?)

* புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக திரும்பி இருக்கிறது என்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்குவதற்கு, பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது! என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாடியுள்ளார். (ஆளாளுக்கு ஒரு டெக்னிக்கு கேப்டன். ஆனா நீங்க இப்படி சொல்றதை ’விஜயகாந்த் ரெகுலர் அரசியலை கவனிக்குறதா ஒரு மாய பிம்பத்தை உருவாக்க, அவர் பெயரில் தினமும் ஒரு அறிக்கையை தே.மு.தி.க. வெளியிடுகிறது’ அப்படின்னு அ.தி.மு.க.காரங்க பேசுறதை கவனிச்சீங்களா கேப்டன்?)

* ”எங்கள் மாநிலத்தில் வெள்ளம் பாதித்தபோது நிதி, உணவு, உடை ஆகியவற்றை தமிழகம் தந்தது. அதேபோல் நாங்களும் கஜா புயலால் அல்லாடும் தமிழக மாவட்டங்களின் மக்களுக்கு ஆடை உள்ளிட்ட உதவிகளை அளிப்போம்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். (சேட்டா! தாங்ல்யூ தாங்க்யூ. பச்சே, நாங்க கொடுத்த டிரெஸ்ஸையெல்லாம் சின்னதா இருக்குதுன்னு இப்போ திருப்பி அனுப்பிடாதீங்க.)

click me!