குட்டிக் கரணம் போட்டாலும் ஸ்டாலினால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது ! செமயாய் கலாய்த்த எடப்பாடி !!

Published : Jul 27, 2019, 07:56 PM IST
குட்டிக் கரணம் போட்டாலும் ஸ்டாலினால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது ! செமயாய் கலாய்த்த எடப்பாடி !!

சுருக்கம்

திமுக தலைவர் ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி கிண்டல் அடித்துள்ளார்..

வேலூர் மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை. பொய் வாக்குறுதி என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றி பெற்றது திமுக. 

இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும். எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார். 

ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. திமுகவின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் மிகவும் உயர்தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகமானோர் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்