எங்கள் அரசை பார்த்து ஊதாரித்தனமான அரசு சொல்லுவிங்களா? பிடிஆருக்கு எதிராக எகிறிய எடப்பாடியார்...!

By vinoth kumarFirst Published Aug 13, 2021, 5:21 PM IST
Highlights

மூச்சுக்கு முன்னூறு தடவை பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசுபவர் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் ஆனால் அவர் தலைமையில் இயங்கும் காவல்துறை கடந்த 9ஆம் தேதி 'நமது அம்மா' நாளிதழ் அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் வழக்கு போட்டு அதிமுக தொண்டர்களின் வேகத்திற்குத் தடை போட முடியும் என்று பகல் கனவு காண வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டு, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- சட்டமன்ற தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை திமுக தந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் போடப்போகும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பது தான் எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் பெற்றோர், மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த விடியா அரசு.

வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதியமைச்சர் அண்மையில் வெற்று அறிக்கையை வெளியிட்டார். ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் அதிமுக அரசு என்ன கூறுகிறதோ அதை ஒட்டுமொத்தமாக வெளியிட்டுள்ளனர். மூச்சுக்கு முன்னூறு தடவை பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசுபவர் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் ஆனால் அவர் தலைமையில் இயங்கும் காவல்துறை கடந்த 9ஆம் தேதி 'நமது அம்மா' நாளிதழ் அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. சோதனையின்போது அலுவலக ஊழியர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அன்றைய பத்திரிக்கை அச்சடிக்கப்பட்ட முடியாமல் பத்தாம் தேதி நாளிதழ் வெளியாகவில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எங்கள் அரசை ஊதாரித்தனமான அரசு என்று நிதியமைச்சர் விமர்சித்துள்ளார். அவரைக் கண்டிக்கிறோம். அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையினர், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் மீதும் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் வழக்குப் போட்டு அதிமுக தொண்டர்களின் வேகத்திற்குத் தடை போட முடியும் என்று பகல் கனவு காண வேண்டாம். பொய் வழக்குகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

click me!