எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் வெறும் 3,600 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டது. ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வரானபின் கொரோனா காலம் தவிர்த்து ஒன்றரை ஆண்டில் 4 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
ஆசியாவிலேயே சிறந்த பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விளங்கி வருகிறது என இபிஎஸ் குற்றச்சாட்டு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்து மக்களை சிரமப்பட வைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் உள்ள வசதிகளை மக்கள் பாராட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
undefined
இதையும் படிங்க: என்னது! 14 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை பதவியை கேட்டேனா? பிரேமலதா கொடுத்த பரபரப்பு விளக்கம்.!
போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் : போக்குவரத்து துறை சார்பில் தற்போதைய நிலையில் 199 புதிய பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வருகின்றன. இதுதவிர, 4 ஆயிரம் பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டு விரைவில் வாங்கப்பட உள்ளது. சென்னைக்கு 100 மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 15,000 பேருந்துகள் வாங்கப்பட்டன. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 10,000 பேருந்துகளும் வாங்கப்பட்டன. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் வெறும் 3,600 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டது. ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வரானபின் கொரோனா காலம் தவிர்த்து ஒன்றரை ஆண்டில் 4 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் காந்தி ரூ.60 கோடி ஊழல்! லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்! பாரபட்சமற்ற விசாரணை நடத்துங்கள்! அண்ணாமலை.!
ஆசியாவிலேயே சிறந்த பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விளங்கி வருகிறது. குற்றச்சாட்டை முன்வைக்கும் எடப்பாடி பழனிசாமி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வர தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர்பாபுவும் உடன் வருகிறோம் பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை சுற்றிக்காட்ட தயாராக உள்ளோம் அவர் வர தயாரா? கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக தவறான புகாரை தெரிவித்து மக்களை குழப்பி ஆதாயம் தேட வேண்டாம் என அமைச்சர் சிவசங்கர் ஆவேசமாக கூறியுள்ளார்.