மூட்டை கட்டிய எடப்பாடி பழனிசாமி... 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிரடி திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published May 17, 2019, 2:32 PM IST
Highlights

நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவில் ஏக களேபரம் நடந்து வருகிறது. சீட் கிடைக்காத பிரச்னையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவில் ஏக களேபரம் நடந்து வருகிறது. சீட் கிடைக்காத பிரச்னையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆட்சி நிலைக்குமோ, இல்லையோ என்ற அச்சத்தில் நிர்வாகிகள் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்கு அளித்த பணத்தை சுருட்டும் பணியில் தீவிரமாக இருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசாரம் எடுபடவில்லை. அதிமுகவில் தேர்தல் பிரசாரம் மக்களை சந்திப்பது போன்றவை மந்த கதியில் இருக்கிறது. இந்த நிலை இப்படியே போனால் நான்கும் நாமம்தான் என்று அக்கட்சியினரே வெளிப்படையாக பேசிக் கொள்கிறார்கள். இதனால், பிரசாரத்தை மூட்டை கட்டிவிட்டு வீட்டில் இருந்து வாக்குசாவடி வரை என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி வாக்காளரை நன்றாக கவனித்து அவரின் ஓட்டு வாக்குசாவடியில் உறுதி செய்யும் வரையிலான இந்த திட்டத்தில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அடுத்து  வீக்கான பகுதிகளில் உள்ள நிர்வாகிகளை அழைத்து அன்பாக பேசியும், கரன்சி மழையால் நனைத்தும் அனுப்பி இருக்கிறார். காவல்துறை மூலமும் சில மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை அழைத்து ஒன்றாக பேச வைத்து தேர்தல் பணியை முடுக்கிவிடும் மூடில் இருக்கிறார் எடப்பாடி. அதனால்தான் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை முடுக்கி விடும் பணியில் கவனம் செலுத்தக் கிளம்பி இருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்த கழக ரத்தத்தின் ரத்தங்கள். 

click me!