தேர்தல் முடிந்தவுடன் எடப்பாடியின் வாழ்க்கையே கிழிந்து விடும்...’ அதிர வைக்கும் மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Apr 13, 2019, 4:15 PM IST
Highlights

மரியாதை கொடுக்கவில்லை என்றால் காது ஜவ்வு கிழிந்துவிடும் என்று முதலமைச்சர் பேசியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும் பழனிசாமியின் வாழ்க்கையை கிழிந்து தொங்கப்போகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறியுள்ளார். 

மரியாதை கொடுக்கவி்ல்லை என்றால் காது ஜவ்வு கிழிந்துவிடும் என்று முதலமைச்சர் பேசியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும் பழனிசாமியின் வாழ்க்கையை கிழிந்து தொங்கப்போகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறியுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனால் அரசியல் தலைவர் வேகாத வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திருநாவுக்கரசரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏக்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்;- திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும், திராவிட இயக்கத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் அதிமுக, பாஜக தேர்தல் அறிக்கை முரண்பாடுகள் நிறைந்தவையாக உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக 37 எம்.பி.க்களை பெற்றதால் தமிழகத்திற்கு என்ன பயன் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுகவினர் போகும் இடமெல்லாம் எதிர்ப்பு, தமிழத்தில் முதல்முறையாக முதல்வர் மீது காலணி வீசும் அளவிற்கு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க.வினர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் அடாவடி செய்ததாக கூறுகிறார். மேலும் மரியாதை கொடுத்து பேசாவிட்டால் ஸ்டாலின் காது ஜவ்வு கிழிந்து விடும் என முதல்வர் கூறுகிறார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கையே கிழிந்து தொங்கப்போகிறது.

எல்லோருக்கும் இந்தியாவில் இருப்பவர் பிரதமர் கிடைப்பார். ஆனால் பிரதமர் மோடியோ வெளிநாடு வாழ் இந்தியர். அவர் தேர்தல் வந்ததில் இருந்து இந்தியாவுக்குள் வந்து, தமிழகத்திற்கு அடிக்கடி வந்து செல்கிறார் என பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். திமுக கட்சி என்றுமே தேர்தலுக்காக மக்களை சந்திக்கக்கூடிய கட்சி  இல்லை மக்களின் பிரச்சனைக்கும் உரிமைக்கும் மக்களோடு, மக்களாக இருப்பவர்கள் என்றும் கூறினார்.

click me!