எடப்பாடி எளிமையானவர்... ஸ்டாலின் அகம்பாவம் பிடித்தவர்... திமுகவை திணறடித்த சி.டி.ரவி..!

Published : Mar 07, 2021, 10:51 AM IST
எடப்பாடி எளிமையானவர்... ஸ்டாலின் அகம்பாவம் பிடித்தவர்... திமுகவை திணறடித்த சி.டி.ரவி..!

சுருக்கம்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் 234 தொகுதிகளில் வெற்றி பெறப் பாடுபடுவோம் என  தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் 234 தொகுதிகளில் வெற்றி பெறப் பாடுபடுவோம் என  தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.

மதுரை புதூர் பகுதியில் பாஜக சார்பில் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்தை தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் கிடைத்துள்ளன. ஓரிரு நாட்களில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்போம்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் 234 தொகுதிகளில் வெற்றி பெறப் பாடுபடுவோம். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடரும். ஜல்லிட்டுக்கு தடை விதித்தது காங்கிரஸ் அரசு அதனை மீட்டு தந்தது பாஜக அரசு.

மு.க.ஸ்டாலினோடு ஒப்பிடுகையில் எடப்பாடி சிறப்பாக செயல்படுகிறார். எடப்பாடி எளிமையானவர், ஸ்டாலின் அகம்பாவம் பிடித்தவர். எடப்பாடி ராசியானவர் என்பதால் மீண்டும் முதல்வர் ஆவார். காங்கிரஸ் - திமுக குடும்ப வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் தாமரையோடு, இரட்டை இலை சின்னமும், மாம்பழ சின்னமும் எங்களுடையது தான் என்ற எண்ணத்தோடு பணியாற்றுகிறோம். தேமுதிகவுடனான கூட்டணி குறித்து அதிமுகதான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என விளக்கம் அளித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..