இப்போ  மைனாரிட்டி ஆட்சிதான் நடக்குது …. ஒப்புக்கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்…

 
Published : Aug 16, 2017, 08:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
இப்போ  மைனாரிட்டி ஆட்சிதான் நடக்குது …. ஒப்புக்கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்…

சுருக்கம்

edappadi palanisamy have a minority govt .. Minister dindugul seenivasan press meet

இப்போ  மைனாரிட்டி ஆட்சிதான் நடக்குது …. ஒப்புக்கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்…

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தற்போது 115 எம்எல்ஏக்களின் ஆதரவுதான் உள்ளது என்றும், மெஜாரிட்டிக்கு இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரை மாவட்டம் மேலூரில் பொதுக் கூட்டம் உன்றை நடத்தினார்.

இதில் 12 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும், 6 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். இதனால் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தற்போது ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில், தங்களிடம் 115 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், மெஜாரிட்டிக்கு இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும் கூறினார்.

 

 

PREV
click me!

Recommended Stories

விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!