
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை, குடும்பத்தாருடன் திருப்பதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழாவின் 9-வது நாள் அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று புனித நீராடினார்.
காவிரிக்கு பூஜை செய்து மலர் தூவி வழிபட்டார். பின்னர், துலாக்கட்ட காவிரியின் மைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புஷ்கரணிக்குச் சென்று புனித நீராடினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், ஓ.எஸ். மணியன் உள்ளிட்ட பலர் உடன் சென்று காவிரி புஷ்கரணியில் புனித நீராடினர்.
இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை திருப்பதிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு செல்வதாகவும் தெரிகிறது.
நாளை திருப்பதி செல்லும் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் காலை சாமி தரிசனம் செய்யப்போவதாகவும், அதன் பின்னர், சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.