சிவாஜி சிலையின் பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் நீக்கப்பட்டதற்கு எஸ்.வி.சேகர் கண்டனம்!

 
Published : Oct 01, 2017, 02:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
சிவாஜி சிலையின் பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் நீக்கப்பட்டதற்கு எஸ்.வி.சேகர் கண்டனம்!

சுருக்கம்

S Ve Saker condemns Karunanidhi name being removed

சிவாஜி கணேசன் சிலையின் பீடத்தில் இருந்து கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டதற்கு தற்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது. பீடத்தில் இருந்து கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டதற்கு, எஸ்.வி. சேகர் கண்டனம் தெரிவித்துள்ர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையின் பீடத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டது.

இதற்கு திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சிவாஜி மணிமண்டப திறப்பு விழா இன்று கோலாகலமாக நடத்தப்பட்டது. விழாவில், நடிகர் பிரபு பேசும்போது, கருணாநிதி வைத்த சிலையின் பீடத்தில் இருந்து பெயர் நீக்கப்பட்டதை குறிப்பிட்டு பேசினார்.

கருணாநிதியின் பெயரை ஒரு ஓரத்தில் இருக்க வேண்டும் என்றும் அப்போது நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர், நடிகர் சிவாஜி கணேசனின் பீடத்தில் இருந்து கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டது அநாகரிகம் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிவாஜி சிலையின் பீடத்தில் இருந்து கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டதற்கு தற்போது எதிர்ப்பு வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்