3 வெளி நாடுகளுக்குச் செல்லும் எடப்பாடி பழனிசாமி…. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழக அரசு !!

By Selvanayagam PFirst Published Aug 26, 2019, 7:11 PM IST
Highlights

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர்  வரும் 28ம் தேதி வெளிநாட்டு பயணத்தை தொடங்க உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டார்களிடம் இருந்து முதலீடுகளை பெற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
வரும் 28ம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் லண்டன் செல்கிறார். 

செப்டம்பர் 1-ஆம்தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு 2-ஆம் தேதி நியூயார்க் செல்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா கால்நடை பண்ணையை சேலம் தலைவாசல் கால்நடைப்பூங்காவிற்கு தேவையான தொழில்நுட்பங்களை அறிய பார்வையிடுகிறார். 

அமெரிக்காவில் இருந்து திரும்பும் வழியில்  செப்டம்பர் 8 மற்றும்  9 ஆகிய தேதிகளில் துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் சுற்றுப்பயணங்களை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 10ந் தேதி சென்னை திரும்புகிறார் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது..

click me!