எங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது.. ஓபிஎஸ்-ஐ முந்திய இபிஎஸ்..!

By vinoth kumar  |  First Published Sep 1, 2023, 2:19 PM IST

 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஓபிஎஸ் கூறியிருந்தார்.


அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு கடந்த மார்ச் 28ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பச்சோந்தியாக மாறிவிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை.. ஓபிஸ் வழக்கில் லெப்ட் ரைட் வாங்கி அலறவிட்ட நீதிபதி.!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று கடந்த 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,  உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. அவ்வாறு தடை விதித்தால் அது தீர்மானங்களை செல்லாது என அறிவிக்க கோரிய பிரதான வழக்கில் நிவாரணம் வழங்கியதாகி விடும் எனக் கூறி தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து 4 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுமா? என ஓபிஎஸ்யிடம்  கேள்வி எழுப்பப்பட்டது. 

இதையும் படிங்க;- தமிழகத்தில் தொடரும் கொலைகள்... வெளியே வரவே அஞ்சும் மக்கள்.! இதுவே திமுக அரசின் 28 மாதகால சாதனை-விளாசும் இபிஎஸ்

அதற்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஓபிஎஸ் கூறியிருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து யாரேனும் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது வலியுறுத்தியுள்ளார். 

click me!