அதிமுகவுக்கு தலைவலி கொடுக்கும் சசிகலா.. சென்னை மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை..!

Published : Jul 01, 2021, 01:02 PM ISTUpdated : Jul 01, 2021, 01:04 PM IST
அதிமுகவுக்கு தலைவலி கொடுக்கும் சசிகலா.. சென்னை மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை..!

சுருக்கம்

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறிய சசிகலா திடீரென அதிமுகவை கைப்பற்றப் போவதாக சசிகலா தொடர்ச்சியாக தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ், இபிஎஸ் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். 

அதேபோல் சசிகலாவுடன் போனில் பேசிய அதிமுக நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட வாரியாக அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவின் ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!