எடப்பாடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு... பெருந்தலைகள் அனைத்தும் பிரசன்ட்...! ஓபிஎஸ் மட்டும் ஆப்சென்ட்..!

By Selva KathirFirst Published Sep 10, 2019, 10:25 AM IST
Highlights

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளில் கடந்த 14 நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உள்ளாட்சித்துறை, தொழில்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை சார்ந்த ஒப்பந்தங்கள் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. 

தனது 14 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவில் முதலமைச்சர் சென்னை திரும்பினார். முதலமைச்சர் சென்னை திரும்பும் நிகழ்வு குறித்து நேற்று பிற்பகலில் இருந்தே தொடர்ந்து தகவல் பரப்பப்பட்டு வந்தது. விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சார்பில் எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்ட்டது. 

இதற்காக நிர்வாகிகள் சிலர் நேற்று இரவே சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். மேலும் முதலமைச்சர் வீடு அமைந்துள்ள பகுதி விளக்கொளியில் ஜொலித்தது. தொடர்ந்து துபாயில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை வந்து சேர்ந்தார். அவரை வரவேற்க அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முட்டி மோதினர். 

அமைச்சர்கள் அனைவரும் முதலமைச்சரை வரவேற்க ஆஜராகியிருந்தனர்.  இதே போல் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் அங்கு வந்திருந்தனர். ஆனால் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வரவில்லை. முதலமைச்சரின் சென்னை திரும்பும் நிகழ்ச்சி குறித்து ஓபிஎஸ்சிடம் ஏற்கனவே கூறப்பட்டது. மேலும் வரவேற்க வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். 

ஆனால் முதலமைச்சரை வரவேற்கும் நிகழ்ச்சிக்காக பெரிதாக ஓபிஎஸ் அலட்டிக் கொள்ளவில்லை. மேலும் நள்ளிரவில் வந்து வரவேற்க என்ன இருக்கிறது என்பது போல் ஓபிஎஸ் இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.  அதே சமயம் முதலமைச்சர் தலைமைச் செயலகம் திரும்பிய பிறகு நேரில் சென்று சந்தித்து வெளிநாட்டு சுற்றுப்பயண விவரங்கள் குறித்து ஆலோசிப்பார்கள் என்கிறார்கள்.

click me!