இன்னும் பதினஞ்சே நாள் தான் அப்புறம் பாருங்க !! தடாலடி தமிழிசை !!

Published : Sep 10, 2019, 10:23 AM IST
இன்னும் பதினஞ்சே நாள் தான் அப்புறம் பாருங்க !! தடாலடி தமிழிசை !!

சுருக்கம்

அடுத்த 15 நாட்களில் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொண்டு தெலங்கானா மக்களுடன் சரளமாக தெலுங்கில் மாட்லாடப்போவதாக  அம்மாநில ஆளுநர் தமிழிசை அதிரடியாக தெரிவித்துள்ளார்.  

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக தமிழிசை நியமிக்கப்படார். அவரது தந்தை காங்கிரஸ் கட்சியில் இருந்போதிலும் அவரை எதிர்த்து தில்லா பாஜகவில் களமிறங்கிளார் தமிழிசை.

தொடர்ந்து இரண்டு முறை தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தமிழிசை தமிழக பாஜக தலைவாக இருந்த ஆண்டுகளில் இங்கு பாஜக தோல்வியையே தழுவியது. ஆனாலும் அவரது கடின உழைப்பு, மற்றவர்க்ள் கேலி, கிண்டல் செய்வதை எளிதாக எடுத்துக் கொள்வது என பல நல்ல பழக்கங்களால் பாஜகவின் தலைமைக்கு தமிழிசையை மிகவும் பிடித்துப் போனது.

இதையடுத்து அவர்  கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை.

இதையடுத்து அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார் தமிழிசை. இதையடுத்து தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள தமிழிசை, அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசினார்

இதையடுத்து அவர்களிடம் பேசிய தமிழிசை அடுத்த 15 நாட்களுக்குள் தெலுங்கு பேச கற்றுக் கொண்டு அம்மாநில மக்களுடன் சரளாமாக தெலுங்கில் பேசப் போவதாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!