அதிமுக ஆலோசனை கூட்டத்தின் தேதியை மாற்றிய இபிஎஸ்.. இதுதான் காரணமா?

By vinoth kumar  |  First Published Sep 3, 2023, 6:38 AM IST

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 


சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறவிருந்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில்;- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் தலைமையில் எம்.ஜி.ஆர்.மாளிகையில் வருகிற 4ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனை கூட்டம் தேதி மாற்றப்பட்டு 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தமிழகத்தையே காப்பாத்த முடியல.. இவரு இந்தியாவை காப்பாத்த போறாராம்.. ஸ்டாலினை எகிறி அடிக்கும் இபிஎஸ்.!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இதையும் படிங்க;- இபிஎஸ் கொடநாடு குறித்து எழுத வேண்டாம் சொன்னார்.. பகீர் உண்மையை போட்டுடைத்த மருது அழகுராஜ்.. !

மேலும், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை ஓபிஎஸ் சந்தித்துப் பேசிய நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!