பேச வரலைன்னா சும்மா இருந்துடணும், அத விட்டுட்டு இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி வெச்சுட்டு!? திண்டுக்கல்லை திட்டி தீர்த்த சீ.எம்!

 
Published : Jun 21, 2018, 12:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
பேச வரலைன்னா சும்மா இருந்துடணும், அத விட்டுட்டு இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி வெச்சுட்டு!? திண்டுக்கல்லை திட்டி தீர்த்த சீ.எம்!

சுருக்கம்

Edappadi palanisamy angry against dindukal srinivasan

“ஒண்ணுமில்ல தம்பி அம்மாகிட்டேர்ந்து கொள்ளையடிச்சாங்கனு பேசுறதுக்கு ஸ்லிப் ஆகிட்டேன் என எடப்பாடியிடம்  பழனிசாமியிடம்  திண்டுக்கள் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இந்த விளக்கத்தை கொஞ்சம் கூட மதிக்காத எடப்பாடியார் உச்சகட்ட கடுப்பில் இருக்கிறாராம்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் வெற்றி விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "18எம்.எல்.ஏ.க்களும் ஆளுநரிடம் சென்று முதல்வரை மாற்ற வேண்டும் என்று மனு கொடுக்கிறார்கள் என்று சொன்னால் நாங்கள் சும்மாவா இருக்க முடியும். இதற்கு விளக்கமளிக்க 18 பேருக்கும் ஒருமாதம் வரை அவகாசம் கொடுக்கிறார் சபாநாயகர்.

ஆனால் அவர்கள் விளக்கம் அளிக்காமல் மைசூர், அமெரிக்கா என்று ஜாலியாக சுற்றிக் கொண்டுள்ளனர். அவர்கள் அம்மாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர் அல்லது ஸ்டாலின் மூலம் வாங்கிக் கொண்டுள்ளனர்’’ என்று அடுத்த சர்ச்சைக்கு திரி கொளுத்தினார்.

இந்தப் பேச்சு தொண்டர்கள் மட்டுமின்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை அதிர்ச்சி அடைய வைத்தது. உடனே சீனியிடம் பேசிய முதல்வர், “என்னண்ணே... இப்படி பேசிட்டீங்க? என்று கேட்க ஒண்ணுமில்ல தம்பி அம்மாகிட்டேர்ந்து கொள்ளையடிச்சாங்கனு பேசுறதுக்கு ஸ்லிப் ஆகிட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பின் உடனே மறுப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

அதில், ’புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழை வைத்து 30 வருடங்களுக்கும் மேலாக உடன் இருந்த சசிகலா மற்றும் குடும்பத்தினர் அம்மாவுக்குத் தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து தினகரன் அரசியல் நடத்தி வருகிறார் என்ற கருத்து பட பேசினேன், ஆனால், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவை பற்றி தவறாக நான் எதுவும் பேசவில்லை. நான் என்றைக்கும் அம்மா அவர்களின் விசுவாசி என்பது அனைவருக்கும் தெரியும் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் ஆனாலும் திண்டுக்கல்லின் இந்த விளக்கத்தால் சமாதானம் ஆகாத எடப்பாடியார் துணை முதல்வர் பன்னீரை அவசர அவசரமாக  வரவழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது, இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு திண்டுக்கல் சீனிவாசன் வேற நம்மளுக்கு கேட்ட பெயர வாங்கிக் கொடுக்குறாரு.

அவர் மேல கண்டிப்பா ஆக்ஷன் எடுத்தே ஆகணும். அவரு எந்த தைரியத்துல அம்மா கொள்ளையடித்த பணம் என்று பேசியிருப்பாரு? பேச வரலைன்னா சும்மா இருந்துடணும். அத விட்டுட்டு இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி வெச்சுட்டு நம்மையும் தர்ம சங்கடத்துல மாட்டி விடுறாங்க. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் அம்மா இருந்தவரைக்கும் இவங்கள யாரையும் வாயே திறக்க விடாமல் வெச்சிருந்தாங்க போல. இப்போ ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சதும் பிரச்னை ஆரம்பிச்சிருச்சு...’ என பன்னீரிடம் புலம்பித் தள்ளியுள்ளாராம்.

‘எப்படி இருந்தாலும் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தப்புதான். ஊருல எல்லோருமே அவரு பேசியதை காட்டி கண்டபடி திட்டுறாங்க. நாம அமைதியா இருக்கிறதைப் பார்த்து, அப்போ அவரு பேசியதை அம்மா சிஞ்சது உண்மைதான்னு நெனசிடுவாங்க, அவருமேல இப்போ நடவடிக்கை எடுப்பதுதான் சரியாக இருக்கும்...’ என்றும் உறுதியாக சொல்லியிருக்கிறார்.  எடப்படியார் சொன்னதற்கு மறுக்காமல் அப்படியே செஞ்சிடலாம் கொஞ்சம் பொறுத்து செய்வோம் என சொல்லிவிட்டு வந்தாராம்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்