எடப்பாடி பழனிச்சாமி மிதக்கிறார்.!:தட்டி தரையடி அடித்த ஸ்டாலின்.

By Vishnu PriyaFirst Published Nov 2, 2019, 4:25 PM IST
Highlights

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம், அதன் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள், மத்திய அரசின் தயவின்றி செயல்பட முடியாத நிலையை, மோடி அரசு உருவாக்கி உள்ளது. 

* மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது எட்டு மாதங்கள் மட்டுமே ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தேன். அதன் பின், பா.ஜ.க. அரசின் தலைமையின் கீழ் 26 மாதங்கள் கவர்னர் பதவி வகித்தேன். இதை அரசியல் விவாதமாக்க விரும்பவில்லை. ஆனால் நிதித்துறையை சுத்தப்படுத்த அப்போது துவங்கப்பட்ட பணி, இன்னும் நிறைவடையாமலேயே உள்ளது. அதை விரைவுபடுத்துங்கள். - ரகுராம் ராஜன் (மாஜி கவர்னர், ரிசர்வ் வங்கி)

* தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம், அதன் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள், மத்திய அரசின் தயவின்றி செயல்பட முடியாத நிலையை, மோடி அரசு உருவாக்கி உள்ளது. இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் மோசடி மற்றும் ஊழல் போன்றவற்றில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தகவல்களை நீர்த்துப் போக செய்துள்ளனர். தேசிய நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். - சோனியா காந்தி (காங்கிரஸ் தலைவர்)

* உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் பணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதையொட்டி, நாட்டின் எல்லை பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுத்து நிறுத்தவும், பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. - அமித்ஷா (மத்திய உள்துறை அமைச்சர்)

* மஹாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, ஜனநாயக கடமையாற்ற முடிவு செய்துள்ளோம். இந்த சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சியாக செயல்படவே எங்களுக்கு மக்கள் ஓட்டளித்து, உத்தரவிட்டுள்ளனர். அதை சிறப்பாக நிறைவேற்றுவோம். 
-    மல்லிகார்ஜுன கார்கே (மஹாராஷ்டிரா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்)

*    ஆழ்துளை கிணற்றில் விழுந்து, உயிரிழந்த சிறுவன விவகாரத்தில் நான் விஞ்ஞானியாக எந்த கேள்வியும் கேட்கவில்லை. சாமானிய மக்களில் ஒருவனாகத்தான் கேட்டேன். என்னுள் எழுந்த சந்தேகத்தைத்தான் கேட்டேன். ஆனால், கற்பனை உலகில் மிதக்கும் முதல்வரிடம் இருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்க முடியாது. 
-    மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*    திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித்தை மீட்பதில் தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் நான்கு நாட்களாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதை நாடே அறியும். ஆனால் குற்றம் கண்டுபிடிப்பதையே வேலையாக கொண்டுள்ள ஸ்டாலின், இதிலும் குறை கண்டுபிடித்துள்ளார். இதுவே அவருக்கு வேலையாகவும், பழக்கமாகவும் போய்விட்டது. - ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)

* உலக வர்த்தக அமைப்பு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், இந்த மாதத்தில் இறுதி செய்யப்பட உள்ளது. அவ்வாறு நடக்குமானால், இந்தியாவில் பெரும் பாதிப்புகள் ஏற்படும். வேளாண் தொழில், உணவு பாதுகாப்பு அடியோடு அழியும். - வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)

* கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 110 மீனவர்கள் காணாமல் போய், ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. அவர்களைத் தேடி கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. உடனடியாக அவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். -  கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

* சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சூலாயுதம்,  பிள்ளையார் சிலை, ஸ்வஸ்திக் சின்னம் போன்றவற்றை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். துணைவேந்தர் அலுவலகத்தில் மிகப்பெரிய சரஸ்வதி சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈ.வெ.ரா.வுக்கு அவமரியாதை நடந்துள்ளது. - கி.வீரமணி (திராவிட கழக தலைவர்)

* அமெரிக்க வீரர்களின் தாக்குதலுக்கு பயந்து, அல்பாக்தாதி ஒரு சுரங்கத்துக்குள், இரு குழந்தைகளுடன் ஓடினார். தப்பிக்க முடியாததால் தன் இடுப்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தார். இதில் அந்த இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர். அப்போது அவரது நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். - கென்னத் மெக்னீஸ் (அமெரிக்க மத்திய கமாண்ட்)

click me!