எடப்பாடியிடம் வம்பு வேண்டாம்! ஆளுநருக்கு டெல்லியில் இருந்து வந்த அட்வைஸ்!

By vinoth kumarFirst Published Oct 11, 2018, 9:30 AM IST
Highlights

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தற்போதைக்கு எந்த வம்பு தும்பும் வேண்டாம் என்று டெல்லியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தற்போதைக்கு எந்த வம்பு தும்பும் வேண்டாம் என்று டெல்லியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது முதலே பன்வாரிலால் புரோஹித் மிகுந்த சுறுசுறுப்பாக மாநிலத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் எந்த இடத்திலும் அரசுக்கு எதிராக அவர் பேசியது இல்லை. காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – ஆளுநர் பன்வாரிலால் இடையிலான நல்ல அன்டர்ஸ்டான்டிங் தான் அதற்கு காரணம். ஆனால் திடீரென கடந்த வாரம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பன்வாரிலால் பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 

துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் கைமாறுவதாக கல்வியாளர்கள் தன்னிடம் கூறியதை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக பன்வாரிலால் கூறினார். பன்வாரிலாலின் இந்த பேச்சு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. காரணம் துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு என கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க கூறி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியது எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.  

துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக ஆளுநர் கூறிய குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தொடங்கி அமைச்சர் ஜெயக்குமார் வரை யாராலும் தகுந்த பதிலை அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் திடீரென நேற்று முன்தினம் துணைவேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியதாக தான் கூறவில்லை என்றும் கல்வியாளர்கள் கூறியதையே தான் கூறியதாக விநோதமான ஒரு விளக்கத்தை ஆளுநர் மாளிகை விடுத்துள்ளது. இதற்கு டெல்லியில் இருந்து ஆளுநருக்கு வந்த அட்வைஸ் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

 

அதாவது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஊழல் அது இது என்று எந்த புகாரும் வேண்டாம் என்று வந்த அட்வைசை தொடரந்தே துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான புகாரில் இருந்து ஆளுநர் பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது.

click me!