எடப்பாடியிடம் பம்மும் ஓ.பி.எஸ்! கைவிட்டதா டெல்லி மேலிடம்?

Published : Oct 23, 2018, 10:51 AM ISTUpdated : Oct 23, 2018, 10:52 AM IST
எடப்பாடியிடம் பம்மும் ஓ.பி.எஸ்! கைவிட்டதா டெல்லி மேலிடம்?

சுருக்கம்

டெல்லி மேலிடம் கைவிட்ட காரணத்தினால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பம்மும் நிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் வந்துள்ளார்.

டெல்லி மேலிடம் கைவிட்ட காரணத்தினால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பம்மும் நிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் வந்துள்ளார்.  புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமணவிழாவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் வைரமுத்துவின் இல்ல திருமணம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்சும் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். 

நிகழ்ச்சியில் வைரமுத்து பேசிய பேச்சு சென்டிமென்டாக மட்டும் அல்லாமல் எடப்பாடி பழனிசாமி தான் கட்சியில் அனைத்தும் என்பது போல் இருந்தது. திருமண நிகழ்ச்சியில் பேசிய ஓ.பி.எஸ்., மணமக்களை வாழ்த்துவதை விட எடப்பாடி பழனிசாமிக்கு ஐஸ் வைக்கும் வகையிலான வார்த்தைகளை தான் தேடி தேடி பேசிக் கொண்டிருந்தார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஜெயலலிதா கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக கூறிய ஓ.பி.எஸ்., தன்னையும் ஈ.பி.எஸ்சையும் பிரிக்க அ.தி.மு.கவிற்குள்ளேயே சரி நடைபெறுவதாக கூறினார்.

 

ஆனால் அந்த சதி வெற்றி பெறாது என்று தெரிவித்து ஓ.பி.எஸ்., எந்த திசையில் இருந்து எத்தனை சுனாமிகள் வந்தாலும் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது என்றும் ஓ.பி.எஸ் கூறினார். வழக்கமாக கட்சிக்குள் எந்த வித கருத்துவேறுபாடும் இல்லை என்றும் இருவரும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தான் பேசுவார். 

ஆனால் புதுக்கோட்டை திருமணவிழாவில் முற்றிலும் மாறுபட்டு ஓ.பி.எஸ் எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டர் ஆகும் வகையில் பேசியுள்ளது. கட்சிக்காரர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதற்கு காரணம் அண்மைக்காலமாக டெல்லி தன்னை கைவிட்டு விட்டதாக கருதும் ஓ.பி.எஸ்., கட்சியில் தனது செல்வாக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றால் ஈ.பி.எஸ்சை அனுசரித்து செல்ல வேண்டும் என்கிற வியூகத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளது தானாம்.

PREV
click me!

Recommended Stories

அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?
விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!