எடப்பாடியாரின் ராச தந்திரம்... 1000 கொடுத்துட்டு 53 ஆயிரத்தை வட்டியா பறிக்க திட்டமா?

By Vishnu PriyaFirst Published Feb 9, 2019, 5:29 PM IST
Highlights

ஜெயலலிதா, கருணாநிதிக்கு இல்லாத கெத்து எடப்பாடியாருக்கு அந்த விஷயத்தில் வந்தது. அது...பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகுப்புடன் ரூபாய் ஆயிரத்தை மக்களுக்கு அள்ளிக் கொடுத்த தாராளம்.

ஜெயலலிதா, கருணாநிதிக்கு இல்லாத கெத்து எடப்பாடியாருக்கு அந்த விஷயத்தில் வந்தது. அது...பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகுப்புடன் ரூபாய் ஆயிரத்தை மக்களுக்கு அள்ளிக் கொடுத்த தாராளம். இதைக் கண்டு உச்சகட்ட கடுப்புக்கு போன ஸ்டாலின், ’தேர்தலை மையமாக வைத்து இப்படியொரு ஸ்டண்ட் அடிக்கிறார்.’ என்று எகிறினார். தன் கட்சியினரை வைத்து வழக்கும் போட்டு பணப்பட்டுவாடாவை நிறுத்தினார். ஆனால் அதையும் உடைத்து அள்ளிக் கொடுத்தார் எடப்பாடியார். 

வெள்ளை கார்டு, பச்சை கார்டு என எந்த பாகுபாடும் இல்லாமல் ரேஷன் கார்டு வெச்சிருக்கும் அத்தனை பேருக்கும் ஆயிரத்தை அள்ளிக் கொடுத்த வகையில் எடப்பாடியாரின் மீது தமிழக மக்கள் மத்தியில் எக்கச்சக்க அன்பும், ஆதரவும் பெருகியிருப்பதாக அ.தி.மு.க.வினர் ஆனந்த கூத்தாடினர். ஆனால், நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யபப்ட்ட பிறகு வந்து விழும் தகவல்களை வாசித்தபின் ஆளாளுக்கு எடப்பாடியார் மீது எக்கச்சக்க டென்ஷன் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று போர் குரல் கிளப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அவர்கள் சொல்வது இதுதான்....”நேற்று சட்டசபையில நிதியமைச்சர் பன்னீர்செல்வம் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செஞ்சார். அதன் மூலம் வரும் நிதியாண்டில் அரசாங்கத்தோட மொத்த கடன் மூணு லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து நானூறு கோடியா இருக்கப்போகுதுன்னு தெரிய வந்திருக்குது. இந்த தொகையை தமிழகத்தில் உள்ள மொத்த ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பகிர்ந்தால் தலைக்கு ஒரு லட்சத்து தொண்ணூற்று ஆறாயிரத்து சொச்சம் விழுது. 

தமிழ்நாட்டில் இப்ப ஜனத்தொகை ஏழரை கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை இருக்கலாமுன்னு கணக்கு. ரேஷன் கார்டில் பெயர் இருக்கும் ஓவ்வொரு தனி தமிழ்நாட்டுக்காரன் தலைக்கும் இந்த தொகையை பகிர்ந்தால் ஐம்பத்து மூவாயிரம் போல விழுது. ஆக இந்த பணத்தை பல வகையான வரிகள் போட்டுதான் வசூல் செஞ்சாகணும். ஆவின் விலை உயர்வு, பஸ்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வுன்னு எல்லாத்துலேயும் கை வைப்பாங்க. இதை நாடாளுமற தேர்தல் வரைக்கும் பண்ணாட்டியும் அதுக்கு பிறகு நிச்சயம் பண்ணுவாங்க. 

அக இந்த உலகத்துலேயே ஆயிரம் ரூபாயை இனாமா வாங்கிட்டு, அதுக்கு ஐம்பத்து மூவாயிரம் ரூபாயை வட்டியா கட்டுற ஒரே ஏமாளி தமிழ்நாட்டுக்காரன் தான். இதை தெளிவா புரிஞ்சுதான் பொங்கல் போனஸை அள்ளிவிட்டிருக்கார் எடப்பாடியார். இப்போ இந்த சங்கதி வெளியில் தெரிஞ்சு போயிடுச்சு, ஆக தேர்தலில் மக்கள் வெச்சு செய்வாங்க அ.தி.மு.க.வை.” என்கிறார்கள்.

ஆனால் முதல்வர் அலுவலகம் உள்ளிட அ.தி.மு.க. அரசு தரப்போ இதை அடியோடு மறுத்து, ‘தகவலை சரியாக புரியாமல், வெறும் காழ்ப்புணர்ச்சியால் வதந்தி பரப்புகிறார்கள். அம்மா வழி நடக்கும் அரசு ஒரு போதும் மக்களை துன்பப்படுத்தாது.” என்கிறார்கள். அப்பூ நிதியமைச்சரே நீங்க என்ன சொல்லுதீக?

click me!