தினகரனை பெண்டிங்ல வையுங்க... தம்பிதுரையை கவனியுங்க... தமிழக பி.ஜே.பி.க்கு டெல்லி கொடுத்த க்ளியர் சிக்னல்!

By Vishnu PriyaFirst Published Feb 9, 2019, 5:20 PM IST
Highlights

தினகரனை ஸ்கேன் பண்றதை கொஞ்சம் பெண்டிங்ல வையுங்க. தம்பிதுரையை கவனியுங்க. வருமான வரி செலுத்துவதி ஆரம்பிச்சு எல்லா விஷயங்களிலும் அவர் கரெக்டா இருக்கிறாரான்னு பாருங்க. இல்லேன்னா அவருடைய புரட்டுகளை  லிஸ்ட் பண்ணி அடுத்தடுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்க.” என்று பின்னிப் பெடலெடுக்க சொல்லிவிட்டார்களாம்.

வருமான வரித்துறையினர் எங்கேயாவது ரெய்டுக்கு போக வேண்டுமென்றால் அதற்கு சில சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தித்தான் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்வார்கள். ‘கச்சேரி! வைபவம்! கல்யாணம்!’ என்று அவை பொதுவாக பாஸிடீவ் டோனில் ஒற்றை வார்த்தைகளாக இருக்கும். 

நாடாளுமன்ற துணை சபாநாயகரின் சொத்துக்களில் கூடிய சீக்கிரம் ‘கச்சேரி’ நடக்கப்போகிறது என்று தகவல்கள் கசிகின்றன. காரணம்? எல்லோருக்கும் தெரிந்ததுதான்... இடைவெளியே இல்லாமல் அவர் மத்திய அரசை போட்டுத் தாக்குவதுதான். ஏதோ திட்டினோம், நகர்ந்தோம் என்றில்லாமல் தி.மு.க. ரேஞ்சுக்கு தங்களுக்கு எதிராக ஓவராக தம்பிதுரை ஒன்மேன் ஆர்மியாகி அட்டாக் செய்வதை பி.ஜே.பி.யான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

  

இத்தனை நாட்களாக பேசியது கூட பரவாயில்லை. ஆனால், இப்போது மோடி தொடர்ந்து தமிழகத்தில் பிரசார சுற்றுப் பயணத்தில் இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் மத்திய அரசு மேல் வெறுப்பு வரும் வகையில் தம்பி பேசிக் கொண்டே இருப்பதுதான் ஓவர் கடுப்பாக்கி இருக்கிறது. அதிலும் சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை பற்றி விமர்சித்த தம்பிதுரை “மத்தியரசு தற்போதைய இடைக்கால பட்ஜெட்டில் சொன்னதை எல்லாம், அவர்கள் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இருந்தபோதே சொல்லி, செயல்படுத்தி இருக்க வேண்டும். 

அப்போது கோட்டிவிட்டு, இப்போது சொல்கின்றனர். இந்த கருத்தை நான் லோக்சபாவில் தொடர்ந்து வலியுறுத்துவேன்.” என்று முழங்கியுள்ளார். போதாக்குறைக்கு “தமிழகத்திற்கு யார் நல்லது செய்கின்றனரனோ அவர்களுடன் தான் கூட்டணி! என முதல்வர் இ.பி.எஸ். பேசி இருப்பதை வரவேற்கிறேன்.” என்று, எடப்பாடியாரையும் உள்ளே இழுத்து விட்டிருக்கிறார். 

மோடி தமிழகம் வந்து செல்லும் நிலையில் தம்பிதுரை இப்படியே பேசிக்கொண்டிருப்பது பி.ஜே.பி.யின் டெல்லி தலைமை கவனத்துக்கு சென்றுள்ளது. கடுப்பான அவர்கள், ‘தினகரனை ஸ்கேன் பண்றதை கொஞ்சம் பெண்டிங்ல வையுங்க. தம்பிதுரையை கவனியுங்க. வருமான வரி செலுத்துவதி ஆரம்பிச்சு எல்லா விஷயங்களிலும் அவர் கரெக்டா இருக்கிறாரான்னு பாருங்க. இல்லேன்னா அவருடைய புரட்டுகளை  லிஸ்ட் பண்ணி அடுத்தடுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்க.” என்று பின்னிப் பெடலெடுக்க சொல்லிவிட்டார்களாம். ஆக கூடிய சீக்கிரம் கரூர் உள்ளிட்ட இடங்களில் ‘கச்சேரி’ இருக்குமுன்னு எதிர்பார்க்கலாம்!

click me!