சசிகலா குடும்பத்துக்கு எடப்பாடி அடி மேல் அடி!! - ஜெ. மரணம் குறித்து விசாரணை!!

 
Published : Aug 17, 2017, 04:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
சசிகலா குடும்பத்துக்கு எடப்பாடி அடி மேல் அடி!! - ஜெ. மரணம் குறித்து விசாரணை!!

சுருக்கம்

edappadi orders to enquiry on jayalalitha death

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கடந்த வருடம் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரின் இறப்புக்குப் பிறகு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகளாக பிரிந்த அதிமுக, இணைப்பு குறித்து பேசி வந்தனர். ஓ.பி.எஸ். அணியினர், சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார். 

இந்த நிலையில், நேற்று கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, அணிகள் விரைவில் இணையும் என்று சூசகமாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஓ.பி.எஸ்., தங்களின் கோரிக்கை பாதி தாண்டியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன், முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அமைச்சர்கள் அவருடன் இருந்தனர். 

அப்போது பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால், தன் இன்னுயிரை நீர்த்துள்ளார். அவரின் இறப்பு குறித்து விசாரணை வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன.

மறைந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!