
ஆட்சியை தக்க வைத்து கொள்ளவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வருகிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதும், தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்தே பேசியதாகவும் அரசியல் குறித்து பேசவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனக்குறைவாக செயல்படுவதாகவும், ஆட்சியை தக்க வைத்து கொள்ளவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வருகிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் தாக்குதல் நடப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பொறியியல் கல்லூரிகளுக்கு இலவச கல்விக்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான நிலுவைத்தொகை 14 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.