அதிசயம், அற்புதம்னு இதத்தான் ரஜினி சொல்லியிருப்பாரோ !! கன்னா பின்னான்னு கலாய்த்த எடப்பாடி !!

Published : Nov 21, 2019, 11:22 PM IST
அதிசயம், அற்புதம்னு இதத்தான் ரஜினி சொல்லியிருப்பாரோ !! கன்னா பின்னான்னு கலாய்த்த எடப்பாடி !!

சுருக்கம்

2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சி தொடரும் என்பதைத்தான் அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நக்கலாக தெரிவித்தார்.  

கோவாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நான் வாங்கிய விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம் அந்த விருதை தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன் என கூறினார்.

தமிழக மண்ணில் ஆன்மீக அரசியலுக்கு இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளாரே என கேட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ரஜினிகாந்த், . 2021 அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை  அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என கூறினார்.

இது குறித்து முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த்  கூறி உள்ளார் என தெரியவில்லை என கூறினார்.


  
2021- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி தொடரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் கூறி உள்ளார். 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார்.  ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகே அவரது கருத்துக்கு பதில் கூறுவேன்.

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என கொண்டு வந்ததே திமுக தான்.  நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி தற்போதும் தொடருகிறது என கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!