மோடி பிரதமர் வேட்பாளராக இருந்ததுபோல எடப்பாடி முதல்வர் வேட்பாளர்... கடம்பூர் ராஜூ நெத்தியடி..!

By Asianet TamilFirst Published Dec 26, 2020, 9:54 PM IST
Highlights

மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி நாடாளுமன்ற தேர்தலை பாஜக சந்தித்ததுபோல தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்ற இலக்குடன் தேர்தலைச் சந்திக்கிறோம் என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 

தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்காமல் சென்றார் என்றால், அவருடைய மௌனம் சம்மதம் என்று அர்த்தம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று கூறி தேர்தலைச் சந்திதோம். மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி நாடாளுமன்ற தேர்தலை பாஜக சந்தித்ததுபோல தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்ற இலக்குடன் தேர்தலைச் சந்திக்கிறோம்.


முதல்வர் வேட்பாளர் யார் என்று நாங்கள் அறிவித்த பிறகு அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கூட்டணி தொடரும் என்று அறிவித்தார்கள். அதை அமித்ஷாவும் ஏற்றுக்கொண்டார். இங்குள்ள பாஜக தலைவர்கள் சொல்லும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். திமுக போன்று அனைத்து கட்சிகளும் கிராம சபை கூட்டம் நடத்தினால் கிராமங்களில் ஒற்றுமை பாதிக்கப்படும். 
கிராம சபை என்ற பெயரில் அதிமுகவை புறக்கணிக்கறோம் என்று திமுக தீர்மானம் போடுவது போல திமுகவை விரட்டியடிப்போம் என்று தீர்மானம் போட எங்களுக்கு வெகு நேரம் ஆகாது. தேமுதிக அங்கம் வகிக்கும் அணிதான் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியது, கட்சி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க சொல்லியிருக்கலாம். தேர்தலின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் இயற்கையாக சொல்லக்கூடிய ஒன்றுதான் இது.

click me!