
இரு துருவங்களாக இருந்த அதிமுக அணிகள் தற்போது ஒன்று சேருவதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக பிளவுப்பட்ட அதிமுக அணியினர் மீண்டும் ஒன்று சேரும் சம்பவமே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரே அணியாக இரு தரப்பினரும் இணைவது பற்றி, அமைச்சர்கள் நேற்று இரவு முதல் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதைதொடர்ந்து இன்று காலை சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் அமைச்சர்கள் மற்றும் ஓபிஎஸ் அணியினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கப்பலை பார்வையிடுவதுபோல் சென்று, நடுக்கடலில் பேச்சு வார்த்தை நடக்கிறது.
இதில், தினகரன் அணியில் இருந்து செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார், தங்கமணி, எஸ்.பிவேலுமணி, ஓ.எஸ்.மணியன், வைத்தியலிங்கம், வேணுகோவால், சி.வி.சண்முகம் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவது குறித்தும், மீண்டும் இணைவதால் அவர்களுக்குள் யாருக்கு எந்த பதவி வழங்குவது என குழப்பம் நீடிக்கிறது. இதுபற்றி இன்று மாலைக்குள் முடிவு தெரியும் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.