
முதல் அமைச்சர் எடப்பாடியைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் டிடிவி.தினகரனுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் பிடி இறுகி வருவதால் டிடிவி.தினகரனை ஓரங்கட்டும் படலம் வெகு ஜோராகவே நடந்து வருகிறது. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஓ.பி.எஸ். அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் இரு அணிகளையும் ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொள்வதா! அல்லது பன்னீர் அணியில் சேர்ந்து கொள்வதா என்ற ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசடனும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டார்.
அப்போது பன்னீர் செல்வத்தை இணைத்துக் கொண்டால் டிடிவி.தினகரனின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது
எது எப்படி இருந்தாலும் கட்சியையும் ஆட்சியையம் காப்பாற்றுவது முக்கியம்.. இந்தச் சூழலில் நாம் தனியாக முடிவெடுப்பது சரியாக இருக்காது.
துணைப் பொதுச் செயலாளர் தினகரனின் முடிவையும் கேட்பது நல்லது என்றாராம் முதல் அமைச்சர் எடப்பாடி.. இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனும், சீனிவாசனும் பெசன்ட் நகரில் உள்ள தினகரனின் வீட்டுக் சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் ஒன்றிணையுமா என்ற கேள்விக்கு இன்று பிற்பகலுக்குள் பதில் கிடைத்துவிடும்.