முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 வாரங்களாக கடும் அப்செட்டில் இருந்து வருவதால் தலைமைச் செயலகம் களை இழந்து காணப்படுவதாக கோட்டை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 வாரங்களாக கடும் அப்செட்டில் இருந்து வருவதால் தலைமைச் செயலகம் களை இழந்து காணப்படுவதாக கோட்டை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு பணிகள் சூடு பிடித்தன. தற்போது கொரோனா தடுப்பில் முன்னணியில் உள்ள கேரளா, கர்நாடகாவை விடஅப்போது தமிழகத்தில் பணிகள் சிறப்பாக இருந்தன. இதனால் தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒன்று இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனால் தமிழகம் கொரோனாவை எளிதாக கட்டுப்படுத்திவிடும் என்கிற நம்பிக்கை இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி நல்ல பெயர் எடுத்துவிடலாம் என்று எடப்பாடியார் தரப்பு கணக்கு போட்டது.
ஆனால் கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பெயர் எல்லாம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எனும் ஒருவருக்கு சென்றது. இங்கே தான் குழப்பம் ஆரம்பமானது. அதுநாள் வரை விஜயபாஸ்கர் பொறுப்பில் இருந்த கொரோனா தடுப்பு பணிகளில் அதிகாரிகள் சிலர் கட்டுப்பாட்டில் சென்றதாக சொல்கிறார்கள் .அந்த அதிகாரிகள் பேச்சை கேட்டு தான் எடப்பாடி நேரடியாக களம் இறங்கி கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
துவக்கத்தில் எடப்பாடியாரின் பணிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கொரோனாவும் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால் சுகாதாரத்துறை மற்றும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அதிகாரிகள் இடையே இணக்கமான சூழல் அப்போது முதலே இல்லை என்கிறார்கள். இந்த ஒருங்கிணைப்பு இல்லாமையால் தான் கொரோனா உருவாகும் கிளஸ்டர்களை தமிழக அரசால் சரியாக கணிக்க முடியாமல் போய்விட்டதாக கூறுகிறார்கள். அதிலும் கோயம்பேடு கிளஸ்டர் மட்டும் உருவாகவில்லை என்றால் தமிழகத்தில் தற்போது கொரோனா முழு அளவில் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும் என்று சொல்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் எடுத்த தவறான முடிவு தான் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் தமிழகத்தை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. கொரோனாவை ஒரே வாரத்தில் கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர்கூறி சுமார் 2 மாதங்கள் ஆகப்போகிறது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25ஆயிரத்தை கடந்துவிட்டது. சென்னையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்துவது கடினம் என்று மூன்று வாரங்களுக்கு முன்னரே தெரிந்துவிட்டது என்றும் இதனால் எடப்பாடி தரப்பு மிகவும் அப்ஷெட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. துவக்கத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் முதலமைச்சர் தரப்பு மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தது. கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் நியமனத்திற்கு பிறகாவது பணிகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் ராதாகிருஷ்ணன் வருகைக்கு பிறகும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அப்ஷெட்டான எடப்பாடியார் துவக்கத்தில் நமக்கு கிடைக்கத நல்ல பெயரை தக்க வைக்காமல் விட்டுவிட்டோமே, எங்கு தவறு நடந்தது, ஏன் தவறு நடந்தது என்று கேள்விகளில் மூழ்கியுள்ளாராம். இதனால் தலைமைச் செயலகமே களை இழந்துவிட்டதாக கூறுகிறார்கள்.