"ஒர்க் அவுட்" ஆகுமா எடப்பாடியின் சிறப்பு பூஜை ?

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
"ஒர்க் அவுட்"  ஆகுமா  எடப்பாடியின்   சிறப்பு பூஜை ?

சுருக்கம்

edapadi palanisami used to pray every day in his native for his cm post

முதலமைச்சர் பதவியை காத்துக்கொள்ள எடப்பாடி சிறப்பு பூஜை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள தினமும் சிறப்பு பூஜைகள் செய்யும் படி குலதெய்வ கோயில் பூசாரியிடம் கூறியுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். எடப்பாடியின் குலதெய்வ கோயில் ஈரோடு மாவட்டம் நசியனூரில் உள்ள அப்பாச்சி கோயிலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்ற முதல்வர் தனது பதவி பறிபோகாமல் இருக்க சிறப்பு பூஜைகள் செய்துள்ளார். மேலும் கோயில் பூசாரியிடம் தினமும் பூஜைகள் செய்யும் படி கூறியுள்ளார். கோயிலில் இருந்து எடுத்து வந்த திருநீரை தினமும் காலையிலும் மாலையிலும் இடுவதுடன் வீட்டில் இருவேளையும் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறாராம்.

இந்நிலையில் ஆர் கே நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பேசியபோது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியில் நீடிப்பார் என்று கூறியுள்ளார். எனவே எடப்பாடி செய்யும் பூஜைகள் தற்போது ஒர்க் அவுட் ஆகியுள்ளது என அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவே நிரந்தரமாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிவருகிறராம். எடப்பாடி வேண்டுதல் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

 

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?