தமிழகமெங்கும் தீவிர போராட்டம்... முதல்வர் வீடு முற்றுகை

Asianet News Tamil  
Published : May 26, 2018, 12:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
தமிழகமெங்கும் தீவிர போராட்டம்... முதல்வர் வீடு முற்றுகை

சுருக்கம்

edapadi home siege

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒட்டி  மக்கள் ஊர்வலத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயம் அடைந்தனர். 13 பேர் பலியாகியுள்ளார். இந்நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாய் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முழுவதும் திமுக மற்றும் அனைத்துகட்சிகளும் மாநிலம் முழுவதும் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தற்போது முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்க அமைப்பினர் முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எடப்பாடி அரசு பதவி விலக கோரி முழக்கமிட்டு போராடினார்கள். அப்போது காவலுக்கு வழக்கத்தைவிட அதிகமாக  அளவில் குவிக்கப்பட்ட போலீஸார்கள் அவர்களின் போராட்டம் செய்யக்கூடாது என அறிவித்து அவர்களை கைது செய்தனர். இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழித்தொழிப்புக்கு இணையானது இந்த துப்பாக்கி சூடு என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினார்.  
 

PREV
click me!

Recommended Stories

‘முடிந்தால் என் காலை வெட்டுங்கள்...’ மிரட்டும் சிவசேனா... அண்ணாமலை பகிரங்க சவால்..!
நானே வெனிசுலா அதிபர்..! தம்பட்டம் அடித்துக் கொண்ட டிரம்ப்..! அமெரிக்க சண்டியரின் அடாவடி..?