
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது குறித்து தேர்தல்
ஆணையம் வரும் 17 ஆம் தேதி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதால்,
சசிகலா பதவியில் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக விதிகளின்படி, அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஓட்டளித்துதான்
ஒரு பொது செயலரை தேர்வுசெய்ய முடியும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட
பொதுச் செயலர் இல்லாத நிலையில், முந்தைய பொது செயலரால்நியமிக்கப்பட்ட
நிர்வாகிகள்தான் கட்சியை வழிநடத்த முடியும்.
அப்படிப்பார்த்தால் சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது
என்ற நிலையே ஏற்படும். இதனடிப்படையில் சசிகலாவின் நியமனம் செல்லாது என அறிவிக்கக் கோரி,
சசிகலா புஷ்பா எம்.பி.யும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ
கே.சி.பழனிச்சாமியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணை வரும் 17 ஆம் தேதி நடத்துவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அண்மையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு சசிகலா அணி வேட்பாளர் தினகரன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது ஆதாரங்களுடன், தேர்தல் ஆணையத்துக்கு எடுத்துச்
செல்லப்பட்டதால், இந்திய தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தலையே ரத்து செய்தது.
இந்நிலையில், வரும் 17ல் நடக்கும் விசாரணையிலும், சசிகலா பொதுச் செயலராக
நியமிக்கப்பட்டது தவறு என,தேர்தல் ஆணையம் தீர்ப்பு சொல்லுமானால்,
அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், அக்கட்சியினர்ஆழ்ந்துள்ளனர்.
ஒருவேளை, அப்படி அறிவிக்கப்பட்டால், சசிகலாவால் கட்சியின் இணைக்கப்பட்டு,
துணைப் பொதுச் செயலர் பதவிபெற்ற தினகரனின் நிலையும் கேள்விக்குறியாகும்.
அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே இல்லாத நிலை ஏற்பட்டு, அவருக்கும்
கட்சிக்கும் சம்பந்தம் இல்லாதநிலை ஏற்படும். அதனால், அவரால், கட்சியை
இப்போது போல தொடர்ந்து வழிநடத்த முடியாத இக்கட்டான நிலைஏற்படும்.
இப்படிப்பட்ட இக்கட்டை தவிர்க்க, இப்போதே, கட்சிக்குள் பலமான யோசனை நடக்கிறது.
அப்படியொரு நிலை உருவாகும் பட்சத்தில், சசிகலாவின் தீவிர ஆதரவாளராக
தற்போது இருக்கும்செங்கோட்டையன் அல்லது ஜெயக்குமார் தலைமையில்,
கட்சியை தொடர்ந்து நடத்த சசிகலா திட்டமிட்டிருப்பதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.