தி.மு.க. கூட்டணி எம்.பி.யை மிரள வைத்த மின்சாரத்துறை அமைச்சர்: கொதிக்கும் ஸ்டாலின், குழப்பும் கொங்கு.

By Vishnu PriyaFirst Published Oct 3, 2019, 2:03 PM IST
Highlights

ஒட்டு மொத்த தி.மு.க.வும் இப்போது ஒரு பெயரைக் கேட்டாலே செம்ம கடுப்பாகிறது. அது......சின்ராஜ்! ஆமாங்க அவரேதான்! தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் தொகுதியை வாங்கி, ஜெயித்தாரே அதே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி.தான்.

ஒட்டு மொத்த தி.மு.க.வும் இப்போது ஒரு பெயரைக் கேட்டாலே செம்ம கடுப்பாகிறது. அது......சின்ராஜ்! ஆமாங்க அவரேதான்! தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் தொகுதியை வாங்கி, ஜெயித்தாரே அதே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி.தான். தேர்தல் பிரசார நேரத்திலேயே இவருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையில் உரசல் இருந்தது. ‘தன்னை ஓவரா நினைச்சு ஸீன் பண்றார்!’ என்று தி.மு.க.வினர் எகிற, சின்ராஜோ ‘யதார்த்தமா பேசி மக்கள் மனசை கவர நினைக்கிறேன். என்னை நம்பி அவங்க வாக்களிக்கணும், அதான் முக்கியம்.’ என்று இதற்கு விளக்கமளித்தார். 

இந்த மோதல் அப்போதே ஸ்டாலினுக்கும், கொ.ம.தே.க.வின் தலைமை நிர்வாகியான ஈஸ்வரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. பின் சமாதானங்களின் மூலம் சரிசெய்யப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யான பின் சின்ராஜ் தன் நாமக்கல் லோக்சபா தொகுதிக்குள் சில அதிரடிகளில் இறங்கினார். இது அ.தி.மு.க.வை அதிர வைத்தது. கையோடு  அவர் சொன்ன சில திட்டங்கள் தி.மு.க.வையும் எரிச்சலூட்டியது. இந்த சூழலில்  தற்போது இவர் அ.தி.மு.க.வோடு ஓவராக இணைந்து நடப்பதாக ஸ்டாலினுக்கு புகார் கடிதம் அனுப்பியிருக்கின்றனர் நாமக்கல் தி.மு.க.வினர். அதிலும் முதல்வரை சந்தித்த பின் ஸ்டாலினே இவர் மீது டென்ஷனாகிவிட்டார். அ.தி.மு.க. விவகாரங்களில் சீறாமல் இவர் அமைதி காப்பது தி.மு.க.வை கடும் டென்ஷனாக்கி உள்ளது. 

சரி, ஏன் இப்படி சின்ராஜ் அ.தி.மு.க. விஷயத்தில் அமைதியாகிட்டார்? என்று தலைமை கேட்டதற்கு தி.மு.க. முக்கியஸ்தர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா “ ஆற்று மணல் லாரிகளை பிடிக்கிறது, முட்டை லாரிகளை பிடிக்கிறதுன்னு ரொம்பவே ஸீன் பண்ணிட்டு இருந்தார் சின்ராஜ். இதனால இவர் மேலே ஆளுங்கட்சி ரொம்ப அதிர்ச்சியில் இருந்துச்சு. இந்த நிலையில சின்ராஜ் மகன் கல்யாணத்துக்கு வந்த பிறகு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவரான  மின்சார துறை அமைச்சர் தங்கமணி ”உங்க கட்சிக்காரங்க எத்தனை பேரு திருட்டு மணல் ஓட்டி வீடு கட்டியிருக்கிறாங்க! அந்த லிஸ்ட்டை நான் ரிலீஸ் பண்ணட்டுமா?” என்று கேட்டிருக்கிறார். இதில் மிரட்சியான சின்ராஜ் அமைதியாகிட்டார். 

அதுக்கு அப்புறம்தான் முதல்வரோடு சந்திப்பும் நடந்துச்சு. தொகுதிப் பிரச்னைக்காக முதல்வரை சந்திச்சேன்! அப்படின்னு வெளியில் சொன்னார். ஆனல் பர்ஷனல் கோரிக்கைக்காகதான் அவரு சந்திச்சிருக்கார்னு அ.தி.மு.க.காரங்களே சொல்றாங்க. இப்ப அவரு எந்த கூட்டணியில் இருக்கிறார்? அவரு கட்சி நம்ம கூட்டணியில் இருக்குதான்னே தெரியலை! ரொம்ப குழப்பி, கடுப்பேத்துறாங்க.” என்று பொங்கியிருக்கின்றனர். 

கொ.ம.தே.க.வின் தலைவரான ஈஸ்வரனிடம் இது தொடர்பான விளக்கத்தைக் கேட்டிருக்கிறதாம் ஸ்டாலின் தரப்பு. 
இந்த சூழலில் சின்ராஜ் எம்.பி.யோ “என்னை எம்.பி.யாக்கி, மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கிய நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு பெரியளவில் நன்மைகளை செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதற்காகவே முதல்வரை சந்தித்தேன். தேவையில்லாமல் என்னைப் பற்றி அரசியல் வதந்தி பேசுபவர்கள் பற்றி அக்கறை இல்லை!” என்கிறார். 
அது சரிதான்!

click me!