தூள் தூளான யூகம்... எடப்பாடி- ஓ.பி.எஸ் மீது சசிகலாவுக்கு இப்படியொரு அபிப்ராயமா..?

By Thiraviaraj RMFirst Published Jul 19, 2021, 4:49 PM IST
Highlights

எல்லாவற்றிலும் ஒரு நம்பிக்கை வரவேண்டும். மற்றவர்கள் அதனை எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் தற்போது ஆட்சி போய்விட்டது.

அதிமுகவில் இருந்து கோண்டு தன்னை விமர்சிப்பவர்களை நான் கண்டு கொள்வதில்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சசிகலா எனும் நான் என்கிற பேட்டியில்,’’நான் சிறையில் இருந்து வெளியானபோதே சொன்னேன். எல்லோரும் சேர்ந்து வெற்றிபெற வேண்டும் என்று. ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எல்லாவற்றிலும் ஒரு நம்பிக்கை வரவேண்டும். மற்றவர்கள் அதனை எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் தற்போது ஆட்சி போய்விட்டது.

‘’அவங்க யாரு. கட்சிக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம் என அதிமுகவில்  இருப்பவர்கள் என்னை விமர்சிப்பதை நான் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் வேண்டுமானல் ‘’நாம சொல்லிவிட்டோம் என நினைத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு தெரியும் என்ன நடந்தது என. என்னை விமர்சிப்பவர்களுக்கு மனசுக்கு சந்தோஷத்தை கொடுத்தது என்றால் அதைப்பற்றி எனக்கு கோபம் இல்லை. வருத்தப்படவும் இல்லை. எதிரியாகவும் நினைக்கவில்லை’’என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த காலத்தில் ஜெயலலிதாவுடன் அறிமுகமானது, எம்.ஜி.ஆருடனான தொடர்பு,  ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தது என பல சம்பவங்களை பகிர்ந்து வருகிறார் சசிகலா. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று காலை பேசிய முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘’தவறான செய்திகளை சசிகலா பரப்பி வருவதாக சாடினார். அத்துடன் எவ்வளவு தவறான கருத்துகளை பரப்பினாலும், சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது'’ என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் யாரையும் எதிரியாகவும் நினைக்கவில்லை. யார் மீதும் கோபம் இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். 

click me!