வேலூரில் ஊழலை பத்திதான் பேசப்போறோம்... தற்காலிக ஆட்சிக்கு விரைவில் மணி அடிக்கப்போறோம்... சொன்னது சாட்சாத் அவரேதான்!

By Asianet TamilFirst Published Jul 8, 2019, 6:10 AM IST
Highlights

“வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு நாங்கள் காரணம் அல்ல. வருமான வரித் துறையினருக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு சொந்தமான வீடு, கல்லூரிகளில் சோதனை செய்துவிட்டு எதுவும் பிடிபடவில்லை என்று எழுதி கொடுத்துதான் சென்றனர்” என்று தெரிவித்தார்.
 

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு நாங்கள் காரணமல்ல என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம் ஆகியோர் போட்டிடுகிறார்கள். ஏ.சி. சண்முகம் தேர்தல் வேலைகளைச் சுறுசுறுப்பாகத் தொடங்கிவிட்டார். கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு, வேலூரில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என ஒவ்வொரு நாளும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டிவருகிறார்.  நேற்று வேலூரில் முகாமிட்ட துரைமுருகன் கட்சி நிர்வாகிகளுடன்  ஆலோசனை நடத்தினார்.


பின்னர் செய்தியாளர்களை துரைமுருகன் சந்தித்தபோது, ‘வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு யார் காரணம் என்பது மக்களுக்குத் தெரியும் என்று ஏ.சி. சண்முகம் பேசிவருவது குறித்து கேட்கப்பட்டது. “வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு நாங்கள் காரணம் அல்ல. வருமான வரித் துறையினருக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு சொந்தமான வீடு, கல்லூரிகளில் சோதனை செய்துவிட்டு எதுவும் பிடிபடவில்லை என்று எழுதி கொடுத்துதான் சென்றனர்” என்று தெரிவித்தார்.


  வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் எதை முன்னிறுத்தி பிரசாரம் செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கும் பதில் அளித்தார் துரைமுருகன். “வேலூர் நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ஊழல் பிரச்னையை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொள்வோம். தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்காலிக ஆட்சிக்கு விரைவில் முடிவு வரும்”  எனவும் துரைமுருகன் தெரிவித்தார். 

click me!