முதல்வரை பார்த்து அசந்து போயிட்டேன்... எடப்பாடியை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன்..!

Published : Jul 03, 2019, 04:24 PM ISTUpdated : Jul 03, 2019, 04:26 PM IST
முதல்வரை பார்த்து அசந்து போயிட்டேன்... எடப்பாடியை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன்..!

சுருக்கம்

சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பதை பார்த்து பலமுறை அசந்து போனதாக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பாராட்டி பேசினார்.

சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பதை பார்த்து பலமுறை அசந்து போனதாக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பாராட்டி பேசினார்.

சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தின்போது, கேள்வி நேரம் முடிவுற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், ’’இதற்கு முன் கேள்வி நேரத்தில் காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை தொடர்பான கேள்விகள் கட்டாயம் இடம் பெறும். ஆனால், நீண்ட காலமாக இந்த துறைகளில் கேள்விகள் வருவதில்லை என்று ஒவ்வொரு துறை பற்றியும் கேள்வி கேட்க உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு.

பேரவைகளில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விக்கு பதிலளிப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்கு தேறிவிட்டார். முதலமைச்சர் ஒன்றும் பதில் சொல்ல முடியாதவர் அல்ல. எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பதை பார்த்து நான் பலமுறை அசந்து போய் இருக்கிறேன்’’ என அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க முதலமைச்சர் தயாராகவே இருக்கிறார். இனி கேள்விகள் இடம்பெறும்’’ என்று கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!