சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுதலை..!! - அன்னிய செலாவணியில் சசிகலாவுக்கு சிக்கல்..!!

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுதலை..!! - அன்னிய செலாவணியில் சசிகலாவுக்கு சிக்கல்..!!

சுருக்கம்

திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் துரைமுருகன்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கே.வி. குப்பம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன்.

காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அவர் சித்தூர் நெடுஞ்சாலையில் கிங்க்ஸ்டன் பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார்.

காட்பாடி குடியாத்தம் மோர்தானா அணைப்பகுதியில் நூற்றுகணக்கான ஏக்கர் நிலமும், காட்பாடி, வேலூர் காந்திநகர் ஆகிய இடங்களில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு தொடுக்கபட்டது.

துரைமுருகன் அவர் மனைவி சாந்த குமாரி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இவ்வழக்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தெட்சிணாமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது

விசாரணை முடிவில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.இதனால் துரைமுருகனுக்கு இருந்த சிக்கல் விலகியது. திமுக தரப்பின் நிலை இப்படி இருக்க.....

அதிமுக தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் எக்மோர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்கமுடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதால் சசிகலா மற்றும் டி.டி.வி தினகரனுக்கு சிக்கல் ஏறபட்டுள்ளது.

அந்நிய செலாவணி வழக்கில் இருந்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரை விடுவிக்க கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சசிகலா மற்றும் தினகரனின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதனால் அந்நிய செலவாணி மோசடி வழக்கில்  சசிகலா மற்றும் அவரது அக்காள் மகன் டிடிவி தினகரனுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!