தமிழகத்தையே அதிர வைத்த துரை முருகனின் அசால்ட் பேட்டி !! கலங்கிப்போன சுதீஷ், பிரேமலதா !!

By Selvanayagam PFirst Published Mar 7, 2019, 7:53 AM IST
Highlights

என்னிடம்  கூட்டணி குறித்து பேச ஆள் அனுப்பிவிட்டு நாங்கள், கூட்டணி குறித்து அ.தி.மு.க.,விடம் பேசி வருகிறோம்' என, சுதீஷ் பேட்டி அளிக்கிறார். இவர்களை நம்பி, எப்படி முடிவெடுப்பது; முதலில், அவர்கள், ஒரு முடிவுக்கு வரட்டும்.என்று திமுக பொருளாளர், துரைமுருகன்  பேசி சுதீஷ் மற்றும் பிரேமலதாவை கலங்கடித்துவிட்டார்.:

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் திமுக 20 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் இடது சாரிகள் தலா இரண்டு இடங்களிலும் போட்டி இடுகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் தலா ஓர் இடத்திலும் போட்டியிடுகின்றன,

இதே போல் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக 5 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஓர் இடத்திலும் போட்டியிடுகின்றன. 

தேமுதிகவிடம் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதால் அந்த கூட்டணி இறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் தேமுதிக கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது. அதிமுகவுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ஒரு புறம் அதிமுகவுடன் பேசிக் கொண்டே, திமுகவிடமும் தேமுதிக பேசி வந்தது.

நேற்று சுதீஷ், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் கூட்டணி பேசிக் கொண்டிருந்தபோதே , தேமுதிக நிர்வாகிகள் திமுக பொருளாளரிடம் கூட்டணி பேச வந்தனர். ஆனால் அவர்களிடம் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று சொல்லி அனுப்பிவிட்டு, துரை முருகன் செய்திளாளர்களிடம் பேசினார்.


அப்போது சுதீஷ், என்னுடன் தொலைபேசியில் பேசினார். கூட்டணி வைக்க விரும்புவதாக கூறினார். இன்று, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் எனக் கூறி, மூன்று பேர், என் வீட்டிற்கு வந்தனர். 'அ.தி.மு.க., கூட்டணியில் இணைவதற்கு, எங்களுக்கு விருப்பம் இல்லை. தி.மு.க., அணியில் சேர விரும்புகிறோம்' என்றனர். 

'நீங்கள் இங்கு வருவது, விஜயகாந்திற்கு தெரியுமா' என்று கேட்டேன்.'நாங்கள், ஏற்கனவே, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து விட்டோம். உங்கள் கவுரவத்திற்கு ஏற்ற தொகுதிகள் இல்லை. தலைவரும் வெளியூரில் இருக்கிறார். 'தொகுதி வழங்கும் அதிகாரம், தலைவருக்கு மட்டும் தான் உண்டு. அவர் வந்ததும், இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்' எனக் கூறி, அவர்களை அனுப்பினேன்.

பின், ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தேன். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக, போன் சொன்னது. பின், தொடர்பு கொண்டபோது, அவர் துாங்குவதாக கூறினர். 'ஏதும் முக்கிய விஷயமா' என்று கேட்டனர்; ஒன்றுமில்லை எனக் கூறி, இணைப்பை துண்டித்து விட்டேன்.இப்போது பார்த்தால், 'நாங்கள், அ.தி.மு.க.,விடம் பேசி வருகிறோம்' என, சுதீஷ் பேட்டி அளிக்கிறார். இவர்களை நம்பி, எப்படி முடிவெடுப்பது; முதலில், அவர்கள், ஒரு முடிவுக்கு வரட்டும்.இவ்வாறு, துரைமுருகன் கூறினார்.:

click me!