மிரட்டும் வேலையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம் ! கில்லி மாதிரி சொல்லி அடித்த துரை முருகன் !!

Published : Mar 30, 2019, 10:22 AM ISTUpdated : Mar 30, 2019, 10:26 AM IST
மிரட்டும் வேலையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம் ! கில்லி மாதிரி சொல்லி அடித்த துரை முருகன் !!

சுருக்கம்

வருமான வரித்துறை சோதனை மூலம் எங்களை மிரட்டி பார்த்தால்  அதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என திமுக பொருளாளர் துரைமுருகன்  தெரிவித்தார்.

திமுக பொருளாளார் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் நடத்தும் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து துரைமுருகன்  செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது எங்கள் வீட்டுக்கு திடீரென சிலர் வந்தனர். யாருன்னு தெரிந்தால் தானே அனுமதிக்க முடியும். வருமான வரித்துறையினர் என்று அறிந்ததும் அனுமதித்தோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இது சோதனைக்கான காலமல்ல. நாங்கள் மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்., தேர்தலில் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என கூறினார்.

ஆனால் . எங்கள் வீட்டிற்கு திடீரென வந்தது ஏன் ? எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், களத்தில் எங்களை எதிர்க்க திராணியற்ற கடைந்தெடுத்த அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சி. நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல் எங்கள் முதுகில் குத்த பார்க்கின்றனர் என்று காட்டமாக தெரிவித்தார்

..

வருமானவரித்துறையினரை வைத்தோ அல்லது வேறு சில அமைப்புகளை வைத்தோ மிரட்டுவதன் மூலம் எங்களை பணியவைக்க முடியாது. நாங்கள் மிசாவை பார்த்தவர்கள், அடக்குமுறையை பார்த்தவர்கள் என்றார்.

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?