இந்த சிறுவன் யார் , என்ன ? தெரியுமா!! நம்ம தல துரை முருகன் பேரன்தான் !!

Published : Jan 13, 2019, 06:29 AM IST
இந்த சிறுவன் யார் , என்ன ? தெரியுமா!!  நம்ம தல துரை முருகன் பேரன்தான் !!

சுருக்கம்

திமுக பொருளாளர் துரை முருகனின் பேரன், தலைவர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கருணாநிதி காலம் முதல் ஸ்டாலின் காலம் வரை அசைக்க முடியாத ஒரு பெரும் தலைவராக இருந்து வரும் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்தின் மகன் தான் இந்த சிறுவன்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த காங்குப்பம் கிராமத்தில் பிறந்தவர் துரை முருகன். அதிமுக நிறுவனர் எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டாலும் திமுக மீது தீராத காதல் கொண்டவர். மேலும் கருணாநிதியின் தீவிர விசுவாசியான இவர், கடந்த 1971 ஆம் ஆண்டு திமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது வரை துரை முருகன் 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டத்துறை  மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார்

வழக்கறிஞரான துரை முருகன் தந்போது  திமுக பொருளாளர் பொறுப்பு வகிக்கின்றார். திமுக வின் மேடைப் பேச்சாளர், இலக்கியவாதி என பன்முகத் தன்மை கொண்ட துரை முருகனுக்கு கதிர் ஆனந்த் என்ற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார்.

கதிர் ஆனந்தும் திமுகவில் மாவட்ட அளவில் பொறுப்பு வகிக்கிறார். கதிர் ஆனந்துக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கருணநிதியிடம் துரை முருகன் எப்படி நெருக்கமாக இருந்தாரோ அதே போல் ஸ்டாலின் தலைமையிலான திமுகவிலும் துரை முருகன் ஒரு அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார்.

இந்நிலையில் தான் துரை முருகனின் பேரன் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றதோடு போட்டோவும் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம்தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிற்து.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!