
இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்போடு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் செயல்பட்டு வருகிறது.
சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில், மதுசூதணும் வேட்பாளராக களம் இறங்குகின்றனர்.
இருதரப்புக்கும் இடையே முதலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் போட்டி நிலவியது. இதில் சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏக்களின் பெரும்பாண்மையை நிரூபித்து முதல்வரானார்.
அதைதொடர்ந்து தற்போது நாங்களே உண்மையான அதிமுக, எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.
இதையடுத்து இருதரப்பினரையும் வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.