ராயப்பேட்டை அலுவலகத்தில் ஈபிஎஸ் - ஒபிஎஸ்... நிர்வாகிகள் மத்தியில் முக்கிய ஆலோசனை...!

First Published Nov 23, 2017, 5:37 PM IST
Highlights
Due to the allocation of the double leaf symbol Madushudanan team Panneerselvam has come to AIADMK headquarters in Royapettah.


இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்கு ஒதுக்கப்பட்டதைதொடர்ந்து எடப்பாடியும் பன்னீர்செல்வமும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்திற்கு வந்துள்ளனர். அங்கு நிர்வாகிகள் மத்தியில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

இரட்டை இலை சின்னம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. காரணம் அதிமுக இரு அணியாக பிரிந்தது. 12 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பன்னீர் அணி நாங்களே உண்மையான அதிமுக என்ற குரலோசையை எழுப்பியது. 

இதனால் குழம்பிய எலெக்‌ஷன் கமிஷன் யாருக்கும் இலை இல்லை என முடிவெடுத்தது. இதையடுத்து தன்னோடு ஒத்துழைக்காத டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சை சமாதானத்திற்கு அழைத்தார். அதன்படி தற்போது, இரட்டை இலை சின்னம் மீண்டும் எடப்பாடி பன்னீர் தரப்புக்கு கிடைத்துள்ளது. 

இதைதொடர்ந்து எடப்பாடியும் பன்னீர்செல்வமும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்திற்கு வந்துள்ளனர். அங்கு நிர்வாகிகள் மத்தியில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

இதில் கட்சியை ஒழுங்கமைவோடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!