இப்படிபட்டவர்களா போலீஸ்...! வழக்கு தொடருவேன்..! டிடிவி தினகரன் கண்டனம்...!

 
Published : Feb 10, 2018, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
இப்படிபட்டவர்களா போலீஸ்...! வழக்கு தொடருவேன்..! டிடிவி தினகரன் கண்டனம்...!

சுருக்கம்

DTV Dinakaran condemned to police

மீனவர் தமிழரசன் காவல்துறையின் அராஜகப் போக்கினால் கடலில் விழுந்து இறந்துள்ளதாகவும் தமிழரசன் விபத்தில் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் எழுதி வாங்க போலீஸ் முயற்சி மேற்கொண்டதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். 

காசிமேடு மீன்படி துறைமுகத்தில் தமிழரசன் என்பவருக்கு சொந்தமாக  விசைப்படகு ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு தனது நண்பர்களுடன் விசைப்படகில் அமர்ந்து சீட்டு விளையாடி கொண்டிருந்துள்ளார். 

அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை விரட்டியடித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் தலையில் காயங்களுடன் மயங்கிய நிலையில் தமிழரசன் கடலில் குதித்துள்ளார். மற்றவர்கள் தெறித்து ஓடியுள்ளனர். 

இதையடுத்து தமிழரசனை தீயணைப்பு படையினர் இரவு முழுவதும் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று காலை உயிரிழந்த நிலையில் தமிழரசன் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. 

தமிழரசின் இறப்பிற்கு போலீசார் தாக்குதல் நடத்தியதே காரணம் எனக்கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மீனவர் தமிழரசன் காவல்துறையின் அராஜகப் போக்கினால் கடலில் விழுந்து இறந்துள்ளதாகவும் தமிழரசன் விபத்தில் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் எழுதி வாங்க போலீஸ் முயற்சி மேற்கொண்டதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் காவல்துறை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!