ஆட்டத்தை கலைத்த ஆர்.கே.நகர்...! பழி வாங்க துடிக்கும் பழனிச்சாமி...! மீளுவாரா டிடிவி...!

Asianet News Tamil  
Published : Feb 10, 2018, 04:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
ஆட்டத்தை கலைத்த ஆர்.கே.நகர்...! பழி வாங்க துடிக்கும் பழனிச்சாமி...! மீளுவாரா டிடிவி...!

சுருக்கம்

The Chief Minister Edappadi Palinasamy feeds ttv

ஆர்.கே.நகர் தொகுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வஞ்சிப்பதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு சாதித்து காட்டினார்.

ஆர்.கே.நகர் மண்ணின் மைந்தன் என கூறப்பட்ட மதுசூதனன் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக நின்றும் தோற்கடிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் பிரதான இடமான ஆர்.கே.நகர் வழக்கமாக இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெறுவார். 

ஆனால் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக இருந்த வெற்றிவேல் டிடிவி பக்கம் இருக்கவே இந்த முறை ஆர்.கே.நகர் மக்கள் டிடிவியை வெற்றி பெற செய்துள்ளனர். 

ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் குடும்பமே காரணம் என கூறிவந்த ஆர்.கே.நகர் மக்கள் மத்தியில் வெற்றிவேலே வெற்றிக்கு காரணம் எனவும் அதனால்தான் டிடிவி அவரை விட்டுக்கொடுக்கமாட்டார் எனவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

இரட்டை இலை சின்னத்தை பெற்றதால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என நினைத்த எடப்பாடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரு தரப்பும் ஒன்றாக இணைந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது என்று தான் கூற வேண்டும். 

இதனால் எடப்பாடி செம்ம கடுப்பில் இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்து வருவதாக தெரிகிறது. 

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வஞ்சிப்பதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

களமிறக்கப்படும் 50000 பெண்கள்... திமுகவின் சீக்ரெட் வேட்டை... கண்ணுக்கு தெரியாமல் மெகா சர்ப்ரைஸ்..!
விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?