
நீட் தோல்வியால்தான் அனிதா தற்கொலை செய்து கொள்டதாக பெற்றோரோ, காவல்துறையோ கூறவில்லை என்றும், மாணவி அனிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர இயலாத காரணத்தால், அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, அனிதாவின் உயிரிழப்பு நீதி கேட்டு பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.
இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
அனிதாவின் மரணம் தன்னிச்சையானது இல்லை. அனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார். மாணவி அனிதா மரணத்தில் மிகப்பெரிய சதி இருக்கலாம்.
திமுக முன்னாள் எம்எல்ஏ சிவசங்கரன், கல்வியாளர் கஜேந்திர பாபுவை விசாரிக்க வேண்டும். மாணவி அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாணவி அனிதா மரணம் தொடர்பான ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைப்பேன்.
சிலரை தற்கொலைக்கு தூண்டி அரசிய்ல ரீதியாக ஆதாயம் பெறும் முயற்சியில் தமிழகத்தில் நடைபெறுகிறது. எனக்கு வந்த தகவல்படி மாணவி அனிதா, இவர்கள் சொல்லிக்கொடுத்த வசநத்தை அவர் சரியாக உச்சரிக்கவில்லை. அனிதா என்ற அப்பாவி பள்ளி மாணவி அவர்களுக்கு பயன்பட்டிருக்கிறாள். தொடர்ந்து கொடுத்த டார்ச்சர், அந்த பள்ளி மாணவி தற்கொலைக்கு தள்ளி இருக்கிறதோ என்று என எண்ணத்தோன்றுகிறது.
அனிதாவின் மரணத்தில் பின்புலமாக இருப்பவர்கள் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிரணை அமைத்திட வேண்டும்.
இது குறித்து நீதி கிடைக்கும் வரை போராடுவேன். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், மாநில அரசுக்கும் இன்றே கடிதம் எழுத உள்ளேன்.
நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய - மாநில அரசுகளுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. மத்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்த திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.