தஞ்சையில் குடிநீர் பிரச்சனை இதுவரை இல்லை - அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி...

First Published Apr 22, 2017, 8:08 PM IST
Highlights
drinking water issue is not in tanjore district by minister duraikannu


தஞ்சையில் குடிநீர் பிரச்சனை இதுவரை இல்லை எனவும், குடிநீர் பிரச்னையை தீர்க்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால் அங்காங்கே குடிநீர் பிரச்சனை எழுந்துள்ளது. குடிநீர் பிரச்சனையை போக்க அமைச்சர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜு வைகை ஆற்றில் நீர் வெப்பமாதலை தடுக்க தர்மாக்கோல் அட்டையை வைத்து தடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அந்த முயற்சி தோல்வியை தழுவியது.

அதைதொடர்ந்து தற்போது ரப்பர் பந்துகளை வைத்து புது முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும், அரசியல் ஆதாயத்திற்காக குடிநீர் பிரச்னையை எதிர்கட்சிகள் அரசியலாக்குகின்றனர் எனவும் தெரிவித்தார்.

மேலும், தஞ்சையில் குடிநீர் பிரச்சனை இதுவரை இல்லை எனவும், குடிநீர் பிரச்னையை தீர்க்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துரைகண்ணு தெரிவித்தார்.

 

click me!